Thursday, January 26, 2012

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 50)ஜோதிவிருட்சம்



அன்புள்ள பதிவு வாசகர்களே,
இந்தப் பதிவில் சித்தர்களின் அபூர்வ மூலிகைகளில் ஒன்றான ஜோதி விருட்சத்தைப் பற்றி பார்ப்போம்.எங்கே நிம்மதி!!!!எங்கே நிம்மதி!!! என்றலையும் மனிதர்களுக்கு உதவும் ஒரு விடயம்தான் இது.


கோரக்கர் மலை வாகடம் என்ற நூல் மலையில் என்னென்ன மூலிகைகள் எங்கெங்கு உள்ளன என்பதையும்,அவற்றின் பயன் என்ன என்பதையும் விவரிக்கும் நூல்.மேலே கொடுத்துள்ள படம், கோரக்கர் மலை வாகடம்,என்னும் அந்த நூலில் ஜோதி விருட்சம் பற்றி உள்ள கட்டுரையின் நகல்.


இந்த மரம் மின்மினிப் பூச்சிகள் ஒட்டினாற்போல சோதி மயமாய்க் காணப்படும்.இந்த மரத்தின் அடியில் நின்று கொண்டு அறியும் இறியும் கிலியும் கமு காயா நம!!! என்று ஆயிரத்தெட்டு முறை சொல்லி நமது பெயரையும் நட்சத்திரத்தையும் ஒரு மஞ்சள் தாளில் எழுதி,மஞ்சள் நூலில் கட்டி,ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுவது போல மரத்தை இடப்புறம் வைத்து காப்பை கட்டி,பொங்கல் வைத்து,தூப தீபம் கொடுத்து அதன் மேற்பரணியைச் சீவிவிட்டு உட்பட்டையை கொண்டு வந்து குழித்தைலம் இறக்கி புத்தகத்தில் கண்ட வகையில் சாப்பிட தேகம் காய சித்தியாகும்.மலமும்,சலமும் பேதிக்கும். (என்றால் அதுவே மீண்டும்,தானே உள்ளுறுப்புகளால் மறு சுழற்சியாக்கப்படும்.)


மரத்தின் பாலைத் துணியிலூட்டி,அதைத் திரியாய்த் திரித்து, விளக்கெண்ணை ஊற்றப்பட்ட விளக்கில் இட்டு,விளக்கை ஏற்றி, மேலே புது ஓட்டை மேலே கவிழ்த்து,அதில் படியும் மையை பஞ்ச லோகத்திலும் இந்த மையைத் தடவி புடமிட பத்து வயதுள்ள தங்கமாகும்.


கீழே அந்த மரத்தின் காய்களைப் படத்தில் கொடுத்துள்ளேன்.அந்த மரத்தின் 108 விதைகளைக் கோர்த்து மாலையாக்கி,அந்த மாலையினால் மந்திரங்கள் செபித்து வர மந்திரங்கள் எல்லாம் சித்தியாகும்.மேலும் காய சித்தியுண்டாகும்.மனம் அமைதி அடையும்.இந்தப் பழத்தையுண்ண எந்த நஞ்சும்(இடுமருந்தின் நஞ்சும் முறியும்).சிறு குழந்தைகளுக்கு கைகளில் கட்ட சீரடிக்காது. சாதாரணமாக நோய்கள் தாக்காது.


கீழே அந்த மரத்தின் விதைகள் மாலையாகக் கோர்க்கப்பட்டதும்.பழங்களின் படமும்.பழங்கள் கொன்றைப் பழங்களைப் போல இருக்கும் என்பதை கோரக்கர் மலை வாகடத்தில் வருணித்திருப்பதை காணுங்கள்.


எனது நண்பர் திரு கண்ணன் அவர்கள் பழங்குடியினர் மற்றும் மலையிலுள்ள ஆதி வாசிகள் என்னும் பழங்குடியினர்களுக்கு (பளியர் என்றும் அழைப்பார்கள்) நல்வாழ்வு அளிக்கும் முகமாக அவர்களை வைத்து சதுரகிரி மலையில் வளரும் மூலிகைகளினால் மருந்துகள் தயாரித்து சதுரகிரி ஹெர்பல்ஸ் என்ற பெயரில் சேவை மனப்பான்மையுடன் செய்து, பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்.


அவரிடம் மேற்படி விதைகள் கிடைக்கும்.வேண்டிய நபர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவும். இதை கழுத்தில் அணிந்தாலே ஞான வாசல் திறக்கும்.


அவரின் அலைபேசி எண்கள்,
+919894912594
+919943205566


அவரது முகவரி:-
பெ.கண்ணன்.
சதுரகிரி ஹெர்பல்ஸ்,
2/147,மங்கம்மாள் கோவில் தெரு,
கான்சாபுரம்,(P-O)
திரு வில்லிபுத்தூர் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.


அவரிடம் தற்போது ஆஸ்துமா, இளைப்பு, ஈளை, காசம் போன்ற நோய்களுக்கு,மூலிகைகள் மற்றும் அபூர்வ மருந்துப் பொருட்கள் சேர்ந்த மருந்து கிடைக்கும்.டெரிப்லின் ஊசிகள், சல்பூட்டமால் பஃப் போன்றவைகள் உபயோகித்து ஈரலையும், மண்ணீரலையும், சிறுநீரகத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கும் அன்பர்கள் தயவு செய்து அவற்றை விட்டு விட்டு இந்த மருந்தைப் பயன்படுத்தி பயனுறுமாறு இதை தெரிவிக்கிறேன்.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

1 comment:

  1. E.RAJANDIRA SAMY ARUL ASI ASIRAMAM NAVAKKANI NAVAKKANI(POST) AMBILIKKAI(VIA) ODDANCHADIRAM(TK) DINDUGAL(DK) CELL NOMPAR 9842192795

    ReplyDelete